வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும், கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடுகளில் இருந்து, விமானம், கப்பல் மூலம் வரும் பயணிகளை, கண்டிப்பாக 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ஐந்தாவது நாள் கொரோனா பரிசோதனை செய்து, அறிகுறி இல்லாவிட்டால், 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும், எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு உயர்நீதீமன்றத்தில், இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.







