மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த மாதம் திறக்கப்பட்டது. கடந்த 26 ஆம் தேதி மண்டல பூஜை நிறைவு பெற்றதையொட்டி கோயில் நடை சாத்தப்பட்டது. தற்போது, மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி என்றும் தரிசனத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் தினந்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.







