கட்சி தொடங்கவில்லை என்ற ரஜினியின் அறிவிப்பு சற்றே ஏமாற்றமாக இருந்தாலும், அவரின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இரண்டாவது நாளாக நாகையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வேளாங்கண்ணி தனியார் விடுதியில், மகளிர் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், பெண் உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டைகளை வழங்கி உரையாற்றினார். தொடர்ந்து மயிலாடுதுறையில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல், அங்குள்ள தனியார் மண்டபத்தில் பெண்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ரஜினி நலமாக இருக்க வேண்டும்; எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் பிரச்சாரப் பயணம் முடிந்தவுடன், நேரில் சந்திப்பேன் என
கமல்ஹாசன் என தெரிவித்தார். மேலும், 600 நாட்களை கடந்தும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை, என கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.







