வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க – பாஜக கூட்டணி வெற்றிபெறும்; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை!

வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க – பாஜக கூட்டணி வெற்றிபெறும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் எல்.முருகன் தலைமையில், பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்…

வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க – பாஜக கூட்டணி வெற்றிபெறும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் எல்.முருகன் தலைமையில், பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை திசை திருப்ப, திமுக இரட்டை வேடம் போடுவதாக சாடினார். திமுகவினர் இந்துக்களுக்கு எதிராக பேசி வருவதால், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், மன்னிப்புக் கோர வேண்டும் என, எல்.முருகன் குறிப்பிட்டார். மேலும், பாஜக அதிமுக கூட்டணி தொடர்கிறது, என தெரிவித்த எல்.முருகன், வரும் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், இந்த கூட்டணி வெற்றிபெறும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply