அதிமுக அமைச்சர்கள் மீது, திமுக புகார் அளித்திருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக, அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் ஒளிப்பதிவாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் நிகழ்ச்சியில், அவர் கலந்து கொண்டார். இதில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் 4 பேருக்கு, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நாடு முழுவதும் பேசப்பட்டதாக தெரிவித்தார். தமிழரின் அவமான சின்னமாக திமுகவும், ஆ.ராசாவும் இருப்பதாக சாடிய அவர், திமுகவில் உள்ளவர்கள் ஊழல் செய்துவிட்டு மற்றவர்கள் மீது பழிபோடுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக தெரிவித்தார்.







