தமிழ் தேசியத்திற்கான அரசியலைத்தான் அதிமுக நடத்துவதாக, அக்கட்சியில் இணைந்துள்ள பேராசிரியர் கல்யாண சுந்தரம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய கல்யாண சுந்தரம், நேற்று முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். இந்நிலையில், அதிமுகவில் இணைந்ததற்கான காரணம் குறித்து, இன்று செய்தியாளர்களை சந்தித்து கல்யாண சுந்தரம் விளக்கினார். தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சி தொடரவே, அதிமுகவில் தான் இணைந்ததாக அவர் தெரிவித்தார். சாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் இருக்கும் கட்சி அதிமுக என்றும், அவர் கூறினார். தமிழ் தேசியத்தை விரும்பி ஏற்கும் அனைவரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலிமைப்படுத்த வேண்டும், என்றும் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.







