2020-ம் ஆண்டில் ட்விட்டரை கலக்கிய தென்னிந்திய நடிகர், நடிகைகள்!

2020ம் ஆண்டில் ட்விட்டரை கலக்கிய நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்படங்களின் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. 2020ம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட செய்திகள், நபர்கள் என பல்வேறு பட்டியல்…

2020ம் ஆண்டில் ட்விட்டரை கலக்கிய நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்படங்களின் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

2020ம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட செய்திகள், நபர்கள் என பல்வேறு பட்டியல் வெளியாகி வருகிறது. அந்தவகையில் இந்தாண்டில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய நடிகர்களில் மகேஷ் பாபு முதலிடத்தையும், பவன் கல்யாண் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். நடிகர் விஜய், சூர்யா, தனுஷ் முறையே 3, 5, 8ம் இடங்களை பிடித்துள்ளனர்.

அதேபோல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முதல் இடத்தை பிடித்துள்ளார். காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் நடிகை த்ரிஷா 10வது இடத்தை பிடித்துள்ளார். 2020ல் ‘திரைப்படங்கள் குறித்து அதிக ட்வீட்’ ஆன டாப்-5 படங்கள் வரிசையில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் முதலிடத்தை பிடித்துள்ளது.

அஜித் நடிக்கும் வலிமை 3ம் இடத்தையும், சூர்யா நடித்த சூரரைப் போற்று 5வது இடத்தையும், ரஜினி நடித்த தர்பார் 10வது இடத்தையும் பிடித்துள்ளது. ”தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னட சினிமா fans’ Twitter timeline கேட்டாலே சும்மா அதிருதுல” என ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply