ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ஆலோசனை நடத்தினார்.
நடிகர் ரஜினிகாந்த் புதிதாக தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் ஆகியோர் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பூத் கமிட்டி அமைப்பது மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.







