முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன். சுழல்பந்து வீச்சீல் ஜாம்பவானான…

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன். சுழல்பந்து வீச்சீல் ஜாம்பவானான இவர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்கள் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராவார். தற்போது, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக உள்ளார். நேற்று முன்தினம் முத்தையா முரளிதரன் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.