நடிகர் விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் 50 வது நாளை முன்னிட்டு, அந்தப் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம், ’மாஸ்டர்’. கடந்த ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்ற. இந்தப் படத்தின் 50-வது நாளை முன்னிட்டு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதும் கிளைமாக்ஸ் காட்சியின் போது எடுக்கப்பட்ட சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன, அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.







