புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மறு பரிசீலனை செய்யக்கோரி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி அரசு, மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலில், அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வர வாய்ப்புள்ளது. இதனால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, புத்தண்டு கொண்டாட்டத்திற்கான அனுமதியை, புதுச்சேரி அரசு மறுபரிசீலனை செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.







