மனைவியுடன் சண்டை; ஆத்திரத்தில் 450 கி.மீ நடந்தே சென்ற கணவர்!

இத்தாலியில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஒருவர், அந்த கோபத்தை தணிப்பதற்காக 450 கி.மீ நடந்தே சென்றுள்ளார். இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை…

இத்தாலியில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஒருவர், அந்த கோபத்தை தணிப்பதற்காக 450 கி.மீ நடந்தே சென்றுள்ளார்.

இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது மனைவியிடம் சண்டை போட்ட 48 வயது நபர் தனது கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக வீட்டை விட்டு வெளியேறி நடக்க ஆரம்பித்துள்ளார்.

ஆனால் அவரது கோபம் அவ்வளவு சீக்கிரம் குறையவில்லை. ஏனென்றால் அவர் சுமார் 450 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளார். அந்த அளவுக்கு அவருக்கு கோபம் அதிகம் இருந்திருக்கும் போல. தினமும் 64 கி.மீ தூரம் வரை நடந்து சென்றுள்ளார். இறுதியில் அவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரது நடைபயணத்தை கேட்டறிந்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக அவருக்கு ரூ.36,000 அபராதமும் விதித்தனர்.

இதனிடையே, அவரது மனைவி தனது கணவரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply