தமிழருவி மணியனை ஏன் சேர்த்துக்கொண்டோம் என ரஜினி வருத்தம் அடைந்துள்ளதாக கேள்விப்பட்டேன்: மு.க.ஸ்டாலின்

தமிழருவி மணியனை ஏன் சேர்த்துக்கொண்டோம் என ரஜினி வருத்தம் அடைந்திருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனி , அம்பேத்கர் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள…

தமிழருவி மணியனை ஏன் சேர்த்துக்கொண்டோம் என ரஜினி வருத்தம் அடைந்திருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனி , அம்பேத்கர் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள 6 இடங்களை சேர்ந்த 3,000 பேருக்கு, நிவாரண பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, திமுக சார்பில் மிக பெரிய போராட்டத்தை தமிழகத்தில் நடத்தி இருப்பதாகக் கூறினார். அதிமுக அரசின் ஊழல்களை ஆதாரத்தோடு கூட்டங்களில் தாம் பேசி வருவதாகவும், அதனை முதலமைச்சரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும், மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். மேலும், ரஜினி கட்சி துவங்கி கொள்கைகளை அறிவித்த பிறகு, தனது கருத்தை தெரிவிப்பதாகக் கூறிய ஸ்டாலின், தமிழருவி மணியனை ஏன் சேர்த்து கொண்டோம் என, ரஜினி வருத்தப்பட்டதாக தனக்கு தகவல் வந்தது எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply