மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பாத்திரை கடை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள கீழவெளி வீதி பகுதியில் 50ற்கும் மேற்பட்ட பாத்திரக்கடைகள் செயல்பட்டு வருகிறது, இந்தப்பகுதியில் மதன்சிங் என்பவருக்கு சொந்தமான பாத்திரக்கடையின் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் புகை வருவதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அனுப்பானடி தீயணைப்பு துறையினர் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை பலமணி நேர போராட்டத்திற்கு அணைத்தனர்,
இந்நிலையில் காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் திடீரென எற்பட்ட மின்கசிவின் காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி அடுத்தடுத்து தீ விபத்துகள் ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது,ஏற்கனவே தீயணைப்புத்துறை சார்பில் பழமையான 1500 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,இச்சம்பவம் குறித்து விளக்குத்தூண் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







