கருப்பு பணம் வாங்காத சில நடிகர்களில் தானும் ஒருவன், என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில், மக்கள் நீதி மய்யத்தின் வழக்கறிஞர்கள் அணி கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் பேசுகையில், வழக்கறிஞர் சேமநல நிதி 7 லட்சத்தில் இருந்து, 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.
மேலும், தற்போது நம் நாடு மீட்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்றும், தான் நினைத்த தமிழகத்தை உருவாக்கவே, அரசியல் களத்தில் இறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், கருப்பு பணம் வாங்காத சில நடிகர்களில், தானும் ஒருவன், என்றும் குறிப்பிட்டார்.







