மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எப்போது நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கான நிரந்தர தீயணைப்பு நிலைய அமைப்பதற்காகும் காலத்தை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மேற்கு சித்திரை வீதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு நிலையத்தை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கான நிரந்தர தீயணைப்பு நிலைய அமைப்பதற்காகும் காலத்தை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேற்கு சித்திரை வீதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு நிலையத்தை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகிலேயே நிரந்தர கட்டடத்திற்கு மாற்றவும், பழமையான அடையாளமான வீர வசந்தராய மண்டபத்தை விரைவாக சீரமைக்க கோரி உயர்தநிதமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் வழக்கை தொடர்ந்தார்.

அந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணிகள் குறித்தும், மண்டபத்தை சீரமைப்பதற்கான கற்களை நாமக்கல்லில் இருந்து கொண்டு வருவதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே சமயம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கான புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க ரூ.1 கோடியே 17 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, எவ்வளவு காலத்திற்குள்ளாக மீனாட்சியம்மன் கோயிலுக்கான நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும், மனுதாரர் இஸ்லாமியராக இருப்பினும் பழமையான இந்து கோயிலின் மீது அக்கறை கொண்டு இந்த வழக்கை தாக்கல் செய்ததால் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்த வழக்கை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply