உலகம் முழுவதும் பல்வேறு பயனாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலி சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
உலகம் முழுவதும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சமூக வலைதள பக்கங்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்று. அதில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவது லைக்ஸுகளை வாங்குவது போன்றவற்றை பயனாளர்கள் வாடிக்கையாக செய்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலி சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செயலியை delete செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தாலும் சரியாக செயல்படவில்லை என்றும் குறிப்பாக News feedகளை பார்க்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதே போன்று கடந்த வாரம் உலகம் முழுவதும் Gmail, யூடியூப், கூகுள் மேப், கூகுள் பே, உள்ளிட்ட கூகுள் செயலிகள் சில மணி நேரங்களாக முடங்கியிருந்தது. திடீரென ஏற்பட்ட இந்த பிரச்னையால் பயனாளர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியிருந்தனர். இதனால் 2020ம் ஆண்டு தனது இறுதி ஆட்டத்தை தொழில்நுட்பம் வழியாக ஆடி வருவதாக இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.







