மதுரையில் ஜல்லிக்கட்டு காளை மரணம் : பொதுமக்கள் அஞ்சலி!

மதுரையில் மரணம் அடைந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  மதுரை  கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடுபிடி வீரர் தீபக். இவர் பத்துக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரது காளைகள் அவனியாபுரம், பாலமேடு,…

மதுரையில் மரணம் அடைந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 
மதுரை  கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடுபிடி வீரர் தீபக். இவர் பத்துக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரது காளைகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மட்டுமின்றி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகளிலும் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளன.
இந்நிலையில்,  தீபக் வளர்த்து வந்த  காளையான ராமு நேற்று பிற்பகல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. இதுதொடர்பான தகவலை அறிந்த கிராம மக்கள் உயிரிழந்த காளைக்கு மாலை, துண்டு, வேட்டி செலுத்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  அதேபோல் அண்டை மாவட்டங்களைச் சார்ந்த மாடுபிடி வீரர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து தாரை தாரை தப்பட்டை முழங்க அப்பகுதி மக்கள் சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை ஏராளமான கிராமத்தினர் பங்கேற்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.