நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ”ஜெயிலர்” திரைப்படத்தின் ஷோகேஸ் வீடியோ வெளியாகி இணையத்தை கதிகலங்க வைத்துள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாடலான ”ஹுக்கும்” எனப்பெயரிடப்பட்ட பாடல் வெளியானது.
’ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடலான “ஜுஜுபி” பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் ஜெயிலர் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். அன்று ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
Meet Tiger Muthuvel Pandian💥 The much-awaited #JailerShowcase is out now🔥
▶ https://t.co/KYv88PnE7L@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi…
— Sun Pictures (@sunpictures) August 2, 2023
இந்நிலையில் தற்போது “ஜெயிலர்” படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பாடலின் அப்டேட்டுக்கும் இணையம் கதிகலங்கிய நிலையில் தற்போது ஷோகேஸ் வீடியோ வெளியாகியுள்ளது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 10 முதல் முத்துவேல் பாண்டியனை ரசிகர்கள் திரையில் பார்க்கவுள்ள நிலையில், நெல்சன் திலீப்குமார் வென்றாரா இல்லையா என்பதை திரையில் காணலாம்.




