வேளாண் சட்டத்தில் ஜனநாயகம் கடைபிடிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் பேசிய ப.சிதம்பரம், விவசாயிகள் வேளாண் சட்டங்களை கொண்டுவரக் கோரி கேட்கவில்லை என தெரிவித்தார். இந்த சட்டத்தில் ஜனநாயகம் இல்லை என்றும், நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை, வாக்குரிமை கிடையாது என்றும் அவர் குற்றம்சாட்டினார். போராடுபவர்களை தீவரவாதிகள் என கொச்சைப்படுத்துவது வேதனையாக உள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார்.







