அமெரிக்காவில் பேஸ்புக் நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளின் காரணமாக காரணமாக வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமை விற்கும் சூழலுக்கு பேஸ்புக் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது,
பேஸ்புக் நிறுவனம் மீது அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுவதும் அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்குகள் தொடர்வதும் வாடிக்கையாகி வருகிறது. அதற்கேற்றார் போல் அந்நிறுவனத்திற்கு அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் இதுவரை கண்டிராத புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. பேஸ்புக் தனது வளர்ச்சிகாக, மற்ற போட்டி நிறுவனங்களை அழிப்பது அல்லது அதிக விலை கொடுத்து அதனை வாங்கிவிடுவதாகவும் அமெரிக்க வர்த்தக ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு ஆதாரமாக வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனம், தான் பெரும் விலை கொடுத்த வாங்கிய வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமை விற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டும் இன்ஸ்டாகிராமையும், 2014ம் ஆண்டு வாட்ஸ் அப்பையும் பல்லாயிரம் கோடிக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.







