நடிகர் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இன்று கோவூர் அருகில் பூஜையோடு துவங்கியது.
படப்பிடிப்பில் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து வரும் முக்கியமான படமாக இருக்கிறது காத்துவாக்குல ரெண்டு காதல் படம்.
இளைஞர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கான படங்களை இயக்கும் விக்னேஷ் சிவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







