பொன்னம்பலமேட்டுக்கு சென்று பூஜை செய்ததற்காக வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை என தலைமறைவாக உள்ள நாராயணன் பேசி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சபரிமலை பொன்னம்பல மேட்டில் அனுமதி இன்றி பூஜை செய்த நாராயணன் உட்பட 9 பேர் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில் இரண்டு பேரை போலீசார் கைது
செய்தனர். தலைமறைவான நாராயணன் உட்பட ஏழு பேரை தேடி வரும் நிலையில் நாராயணன் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் பேசியதாவது:
நான் திருச்சூரில் வசித்து வருகிறேன். தமிழகம் முழுவதும் பல இடங்களுக்கு சென்று பூஜை செய்து வருகிறேன். அதன் அடிப்படையில் பொன்னம்பலமேட்டுக்குப் போகும் சூழ்நிலை கிடைத்தது. இப்படி பூஜை செய்ய போகும் இடங்களெல்லாம். அய்யப்பன் அருள் பெற்றதால் தான் பொன்னம்பலமேட்டில் பூஜை செய்ய முடிந்தது.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.ஆனால் அங்கு எந்த தவறும் செய்யப்படவில்லை. பூஜை செய்ததற்காக வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை.என விளக்கம் அளித்துள்ளார்.







