திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியை பிளாட்பாரத்தைல் உரசி செல்லும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆவடியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் புறநகர் ரயில் சேவையில் தினம் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர்.பயணிகளின் வரத்து அதிகரிப்பு காரணமாக பெரும்பாலும் நெருக்கடியான சூழல் நிலவும்.
இந்நிலையில் சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலர் இந்து கல்லூரி ரயில்
நிலையத்தில் பிளாட்பாரத்தில் பட்டா கத்தியை உரசியபடி சென்ற சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருவள்ளூர் அரக்கோணம் பகுதியில் உள்ள கல்லூரி
மாணவர்களை தேடும் பணியில் ஆவடி ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து தேடி
வருகின்றனர்.
இதற்கு முன் ”ரூட் தல “ என்ற பிரச்சனை ரயில் நிலையத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறையும் கல்லூரி மாணவர்கள் இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுவது ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான தீவிரப்படுத்தும் படி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.







