அர்ஜூன் டெண்டுல்கரை நாய் கடித்ததை தொடர்ந்து நகைச்சுவை மீம்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தற்போது 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று லக்னோவில் 63-வது லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பங்கு பெற உள்ளன. லக்னோ அணியில் இந்த ஆண்டு தான் சச்சின் டெண்டுர்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார். இடது கை பந்து வீச்சாளரான அர்ஜுன், லக்னோ அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி, 3 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில் லக்னோ அணி வீரர் யுத்விர் சிங் மற்றும் மோசின் கான் உடன் அர்ஜுன் டெண்டுல்கர் பேசுகையில் தன்னை நாய் கடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதன் காரணமாக அவரால் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Mumbai se aaya humara dost. 🤝💙 pic.twitter.com/6DlwSRKsNt
— Lucknow Super Giants (@LucknowIPL) May 15, 2023
நாய் கடித்து கையில் காயம் ஏற்பட்டுள்ளதால், அர்ஜூன் டெண்டுல்கர் இன்று நடைபெறும் போட்டியில் விளையாட கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது நகைச்சுவை மீம்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தனது அணிக்காக சில போட்டிகளில் மட்டும் இவர் விளையாடினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அர்ஜூன் டெண்டுல்கருக்கு பின்னடைவை அளிப்பதாக கருதப்படுகிறது.







