புதுவகை கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

இங்கிலாந்தில் இருந்து வந்த நபருக்கு, புதிய வகை வைரஸ் உள்ளதா, இல்லையா என சோதனை முடிவில் தெரியவரும் என்பதால், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…

இங்கிலாந்தில் இருந்து வந்த நபருக்கு, புதிய வகை வைரஸ் உள்ளதா, இல்லையா என சோதனை முடிவில் தெரியவரும் என்பதால், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ராஜகிரியில், கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இங்கிலாந்திலிருந்து விமானம் மூலம் வந்த 15 பேருக்கு செய்யப்பட்ட சோதனையில், ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாகவும், அவரின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள சோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் புதிய வகை வைரஸ் பரவாமல் தடுக்க, தேவையாள அறிவுரைகள், ஆலோசனைகளை, முதல்வர் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 நாட்களில், லண்டனில் இருந்து வந்த ஆயிரத்து 88 பேரை அடையாளம் கண்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். எனவே, புதுவகை வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் எனவும், சுகாதாரத்துறை முழு கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது, என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply