பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!

கொரோனா தடுப்பூசி விலையை குறைக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும், என்று பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை, மத்திய…

கொரோனா தடுப்பூசி விலையை குறைக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும், என்று பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை, மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும், என கோரியுள்ளார். மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு விற்பதால், மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை ஏற்படும், என தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு, தேவையான தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதுடன், மத்திய அரசே கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு வழங்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளையும், மத்திய அரசு ஆராய வேண்டும், என தெரிவித்துள்ள முதலமைச்சர், கொரோனா தடுப்பூசி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.