பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை OLX தளத்தில் விற்க முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாங்கள் பயன்படுத்திய பொருட்களை வீட்டில் இருந்தபடியே நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு OLX இணையதளத்தை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். அந்தவகையில் அதில் செய்யப்பட்டிருந்த ஒரு விளம்பரம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. ஏனென்றால் பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலம் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
4 அறைகள், 4 பாத்ரூம்கள் கொண்ட 6,500 சதுர அடி கொண்ட அலுவலகம் ரூ.7.5 கோடிக்கு விற்பனை செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான புகைப்படங்களும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. இதில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விளம்பரம் உடனடியாக தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







