நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை, என அறிவித்ததற்கு பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஜினி அரசியலுக்கு வருவதில் தனக்கு உடன்பாடு இல்லை, எனவும் ஒரு நண்பனாக பலமுறை அவரிடம் சண்டை போட்டிருக்கிறேன் என்று பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஜினி இமயமலை போன்ற ஒரு உச்சியை தொட்டவர் என்றும், பணம், புகழ் என அத்தனையையும் அவர் தொட்டவர் என்றும், அதற்கு மேல் செல்ல எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனையில் இருக்கும்போது ரஜினியிடம் தாம் பேசியதாகவும், அவரை நான் எப்போதும் தலைவா என்று தான் அழைப்பேன், தலைவா நீ எட்டாத உயரத்திற்கு சென்று விட்டாய் இந்த அரசியல் தேவையா? மன நிம்மதி வேண்டும். நீ ஆன்மீகவாதி உங்களுக்கு கடவுள் எல்லாவற்றையும் அளித்துள்ளார். இதற்கு மேல் நீங்கள் எங்கு போக முடியும். தயவுசெய்து இதைப்பற்றி யோசித்து பாருங்கள் என தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஜினி எடுத்த முடிவு சரியான முடிவு ; ஐ லவ் யூ தலைவா எனவும் அவர் பேசியுள்ளார்.







