அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மின் ஆலையில் 1,000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரம் பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது.
அலபாமாவில் உள்ள ஒரு பழைய மின் நிலையத்தில், 1000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரத்தை பாதுகாப்பாக தவிர்ப்பதற்காக, குழுவினர் வெடி பொருட்களை பயன்படுத்தினர். ஹண்ட்ஸ்வில்லுக்கு வடகிழக்கில் சுமார் 65 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலை 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. 65 ஆண்டுகளுக்கு மேல் செயல்பாட்டில் இருந்த இந்த மின் ஆலை, 2014ஆம் ஆண்டு மூடப்பட்டது.
இந்த பகுதியின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிக்காக, 300 மீட்டர் உயரமுள்ள இந்த கோபுரம் இடிக்கப்பட்டது.







