நேபாள நாட்டின் பொகாராவில் இருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது கஜூரி அருகே சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி, அருகில் உள்ள திரிசூலி ஆற்றுக்குள் பேருந்து விழுந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்தவுடன், நேபாள ராணுவம், ஆயுத போலீஸ் படை, நேபாள போலீசார் ஆகியோர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 25 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 19 பேரில் இதுவரை ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 24 வயது இங்கிலாந்து நாட்டவர் ஒருவரும், சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த நபர்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் அடைந்தவர்களில் ஜப்பான், நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு பெண் பயணியும் அடங்குவர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







