ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கலைச்செல்வி பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளியல், புள்ளியியல் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயா சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த சினேகா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த மாலதி ஹெலன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியரான ரவிகுமாரை கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு பணியில் இருந்த சந்திர சேகர் சாகமூரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரியான சண்முக சுந்தரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரியான நே.பொன்மணி ஈரோடு வணிக வரி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.