ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் நேரு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 63 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 41 வயது மதிக்கத்தக்க நோயாளியை மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது.
அவரை அழைத்து சென்ற 1 மருத்துவர், 1 செவிலியர், 2 உதவியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 7 பேரும் நேற்று இரவு 7:11 மணிக்கு விமானத்தில் புறப்பட்டுள்ளனர். அப்போது மோசமான வானிலையைத் தவிர்க்க பாதையை மாற்ற கொல்கத்தா வான்வழி கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கேட்டுள்ளது.
அனுமதி கேட்ட சிறிது நேரத்திலேயே, வாரணாசிக்கு தென்கிழக்கே 100 கடல் மைல் தொலைவில் விமானத்தின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டம் கசாரியா காட்டுப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் 7 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.







