நாட்டின் நலனுக்காகவே சுயசார்பு இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அநீதிக்கு எதிராக இந்தியா நிற்கிறது என தெரிவித்தார். பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கை அடைய, சரியான வழியில் பயணிக்கும் முக்கியமான நாடு இந்தியா மட்டுமே என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.







