மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிகட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் ஒப்புதல்!

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில், இடதுசாரிகட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் வழங்கியுள்ளதாக, மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு, ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்…

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில், இடதுசாரிகட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் வழங்கியுள்ளதாக, மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு, ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, இடதுசாரிகட்சிகளுடன், கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

இது குறித்து பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, மேற்குவங்க மாநிலத்தில் முதலில், பாஜகவுடன் கூட்டணி அமைத்த மம்தா பானர்ஜி, தற்போது அந்த கட்சியை எதிர்க்க முடியாமல் தவிக்கிறார். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில், இடதுசாரிகட்சிகளுடன் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் தலைமை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, பாஜகவை நிச்சயம் காங்கிரஸ் கூட்டணி வெல்லும்’என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply