உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை நாளை வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைகாட்சி ஒன்றில் பிரபலமான நாடகத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா இன்று அதிகாலை சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.தாம் நடித்து வந்த தனியார் தொலைக்காட்சி நாடகத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வந்தது. இதில் பங்கேற்பதற்காக அங்கு வந்த சித்ரா அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார். இவரது வீடு திருவான்மியூரில் உள்ளது.
தினமும் அங்கிருந்து படப்பிடிப்புக்கு சென்று வரமுடியாது என்பதால், படப்பிடிப்பு குழுவினரே இவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதன்படி தினமும் ஓட்டலில் இருந்து சென்று படப்பிடிப்பில் சித்ரா பங்கேற்று வந்தார்.இந்தநிலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஓட்டலில் இன்று அதிகாலை திடீரென தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற தகவல் வெளியானது. சித்ராவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயம் ஆனது. கரையான்சாவடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஹேம்நாத் என்பவரோடு வருகிற ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது.
இந்தநிலையில் தான் அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. சித்ராவுக்கு நிச்சயிக்கப்பட்ட ஹேம்னாத்தும் அவருடன் அதே ஓட்டலில் தங்கியிருந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா, குளிக்கப் போவதாக அவரிடம் கூறியுள்ளார். எனவே, ஹேம்நாத்தை அறைக்கு வெளியே இருக்குமாறு கூறி உள்ளார். இதையடுத்து ஹேம்நாத் வெளியே சென்றதும் சித்ரா அறையின் கதவை பூட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
குளிக்க சென்ற சித்ரா நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த ஹேம்நாத் கதவை தட்டினார்.நீண்ட நேரமாகியும் சித்ரா கதவை திறக்காததால், இதுபற்றி ஓட்டல் வரவேற்பறையில் ஹேம்நாத் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஓட்டல் ஊழியர் கணேஷ் விரைந்து வந்தார். அவர் மாற்றுச்சாவியால் அறையின் கதவை திறந்தார். அப்போது மின்விசிறியில் நைட்டி அணிந்த நிலையில், சித்ரா தூக்கில் பிணமாக தொங்கியிருந்ததாக கூறப்படிகிறது.
உடனடியாக இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் உடனடியாக ஓட்டலுக்கு விரைந்து சென்று உடலை மீட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சித்ராவின் உடல் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.
சித்ரா உயிரை மாய்த்துக்கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குசென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளதாகவும் வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். சித்ராவின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மெர்கொன்டு வருகின்றனர். போது அறையில் சித்ராவுடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்துள்ளார் என்பதால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறனர்.
இன்று மாலை 5 மணி அளவில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சித்ராவின் உடலை அம்பத்தூர் வட்டார கேட்டாட்சியர் லாவண்யா ஆய்வு செய்தார். சித்ராவின் உடற்கூறாய்வு நாளை நடைபெறும் எனவும் அதன் பின் அவரது உடற்கூறாய்வு அறிக்கை வழங்கப்படும் எனவும் வட்டார கோட்டாட்சியர் லாவண்யா தெரிவித்தார்.







