நடராஜன் விளையாடுவதை டிவியில் பார்த்து நெகிழ்ந்த அவரது தாய்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடியதை தொலைக்காட்சியில் பார்த்து அவரது தாயார் மகிழ்ச்சி அடைந்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் ஐபிஎல் கிரிக்கெட்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடியதை தொலைக்காட்சியில் பார்த்து அவரது தாயார் மகிழ்ச்சி அடைந்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். தற்போது இந்திய அணியில் இணைந்துள்ள நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு வலு சேர்த்தார். சேலத்தில் தொலைக்காட்சியில் இதனைப் பார்த்த நடராஜனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த போட்டியில் 10 ஓவர்கள் பந்து வீசிய நடராஜன், 70 ரன்களை கொடுத்து இரண்டு முக்கிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply