முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் நடராஜன்; முதலமைச்சர் வாழ்த்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தான் களமிறங்கிய முதல் சர்வதேச போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜன் அசத்தியுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி…

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தான் களமிறங்கிய முதல் சர்வதேச போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜன் அசத்தியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான இந்த 3 வது ஒரு நாள் போட்டி மூலம் இந்திய அணி சார்பில் சர்வதேச கிரிக்கெட்டில் தமிழகத்தை சேர்ந்த வீரர் நடராஜன் களமிறங்கினார். ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சில் பந்து வீசிய நடராஜன், தொடக்க வீரர் லபுசானேவின் விக்கெட்டை வீழ்த்தி தனது சர்வதேச போட்டியில் முதல் விக்கெட்டை பதிவு செய்தார். இந்த போட்டியில் 10 ஓவர்களை வீசிய நடராஜன் 70 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

முதல் சர்வதேச போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசிய நடராஜனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமி, இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply