“தேர்தலில் யாரை எதிர்த்து வேண்டுமானாலும் போட்டியிட தயார்”- குஷ்பு!

சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, யாரை எதிர்த்து வேண்டுமானாலும், போட்டியிட தயாராக இருப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் அடுத்த திருவையாற்றில் பாஜக சார்பில் “நம்ம ஊர் பொங்கல்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு…

சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, யாரை எதிர்த்து வேண்டுமானாலும், போட்டியிட தயாராக இருப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அடுத்த திருவையாற்றில் பாஜக சார்பில் “நம்ம ஊர் பொங்கல்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாரும் யாருக்கும் அடிமை கிடையாது, தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி என்றால், நாட்டிலேயே மிகப் பெரிய கட்சியாக பாஜக உள்ளது என தெரிவித்தார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு புரோட்டோகால் உள்ளதாக கூறிய அவர், அந்த விதிமுறைப்படியே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தெரிவிப்போம் என விளக்கமளித்தார்.

மேலும் பேசிய அவர், ’ஸ்டாலினை பொறுத்தவரை அவர் எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் என முடிவு செய்யட்டும். ஸ்டாலின் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் போட்டி போட நான் தயாராக இருக்கிறேன். கார்த்தி சிதம்பரம் அப்பா பெயரை ஒதுக்கி வைத்துவிட்டு வரட்டும். பிறகு என்னுடன் போட்டிக்கு வரட்டும். நான் அவரை ஒரு ஆளாகவே மதிக்கவில்லை, நாங்கள் எந்த கட்சிக்கு சென்றாலும் விசுவாசமாக இருப்போம், பா.சிதம்பரம் போன்ற ஆட்கள் எங்களை மாதிரி ஆட்கள் கட்சியில் இருந்தால் தனது மகனுக்கு போட்டியாக வந்து விடுமோ என பயந்து எங்களை மாதிரி ஆட்களை வெளியே தள்ளுவதற்கு நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்’ என விமர்சனம் செய்துள்ளார்.

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றும் குஷ்பு கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply