தேனி அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

தேனி மாவட்டம் தேனி அரசு மாதிரிப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை கண்டித்து தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டாதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தேனி அல்லிநகரம் பகுதியில் செயல்படும் அரசு…

தேனி மாவட்டம் தேனி அரசு மாதிரிப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை கண்டித்து தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டாதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தேனி அல்லிநகரம் பகுதியில் செயல்படும் அரசு மாதிரிப்பள்ளியில்
கடந்த 2019 – 20ஆம் ஆண்டில் எல்.கே.ஜி. வகுப்புகள் சேர்க்கப்பட்ட மாணவர்கள்
தற்போது இரண்டாம் வகுப்பு முடித்து மூன்றாம் வகுப்பு செல்ல உள்ளனர். இந்த
நிலையில் இவர்களுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டில் நிறுத்தப்படுவதாக
அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தேனி அல்லிநகரம் காவல்துறையினர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் பேச்சுவார்த்தை நடத்தினர்.மீண்டும் அதே பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்துவதாக பள்ளியின் தரப்பில் அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

திடீரென அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதால், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அல்லிநகரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.