சென்னை தாம்பரத்தை சேர்ந்த 4 மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 2 தங்கம் பதக்கம் உள்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, அந்தமான் உள்ளிட்ட இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தாம்பரம் கிக்ஸ் ஆண்ட் பஞ்சஸ் கராத்தே பயிற்சி மையத்தை சேர்ந்த சென்சாய் கார்த்திகேயன் தலைமையில் 4 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கத்தா பிரிவில் 6-ம் வகுப்பு மாணவர் வசீகரன், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஹரி,
நிக்கிலேஷ் ஆகிய இருவர் தங்கப்பதக்கமும், யு.கே.ஜி. மாணவர் சஞ்சய் ஷிவ்
மற்றும் 5-ம் வகுப்பு மாணவர் சிவபிரியன் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும்
வென்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு கிக்ஸ் ஆண்ட் பஞ்சஸ் பயிற்சி மையத்தின் இயக்குநர் சென்சாய் கார்த்திகேயன், சென்சாய் வனிதா கார்த்திகேயன் பாராட்டுகளை
வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.







