ரஜினி கட்சிக்கு முன்னணியிலும் பின்னணியிலும் பாஜக இல்லை என்று பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த வானதி சீனிவாசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதிய கட்சிகள் வந்தாலும் தென்னிந்தியாவில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்து வருவதாக கூறினார்.
https://twitter.com/VanathiBJP/status/1335462935578099712
தெலங்கானாவை போல் தமிழகத்திலும் பாஜக வெற்றிபெறும் என்றும் இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாஜகவினர் சட்டப்பேரவையை அலங்கரிப்பார்கள் என்றும் கூறினார். வேல்யாத்திரை நிறைவு விழாவில் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்கவுள்ளதாக கூறினார்.







