துருக்கி இளைஞரை காதலித்து கரம் பிடித்த கரூர் பெண் – திருமண வீடியோ சமூக வலைத்ததளங்களில் வைரல்!

கரூரை சேர்ந்த பிடெக் பட்டதாரி இளம்பெண் ஒருவர் துருக்கியை சேர்ந்த இளைஞரை காதலித்து கரம் பிடித்துள்ளார். இவர்களுடைய திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ்.…

கரூரை சேர்ந்த பிடெக் பட்டதாரி இளம்பெண் ஒருவர் துருக்கியை சேர்ந்த இளைஞரை காதலித்து கரம் பிடித்துள்ளார். இவர்களுடைய திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகள் பிரியங்கா. பிடெக் பட்டதாரியான பிரியங்கா டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்போது அவருக்கும் துருக்கி நாட்டை சேர்ந்த எம்டெக் பட்டதாரியான அஹமத் கெமில் கயான் என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அஹமத் டெல்லி மற்றும் துருக்கியில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர்களுக்குள் நண்பர்களாக உருவான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதனையடுத்து இருவரும் இரு வீட்டு சம்மத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இரு வீட்டாரும் ஒப்புக்கொண்ட நிலையில் இவர்களின் திருமணம் தமிழ் பாரம்பரிய முறைப்படி நேற்று நடைபெற்றது. கன்னிதானம், தாலி கட்டுதல், மாப்பிளை அழைப்பு என அத்தனை நிகழ்வுகளும் தமிழ் முறைப்படியே நடைபெற்றன.

அஹமதின் உறவினர்கள் ஒவ்வொன்றைடும் ஆர்வமாக கேட்டு  புரிந்து கொண்டனர். இவர்களின் திருமண வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.