மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நகராட்சி பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் தாக்கம் சற்றே அதிகமாக உள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. அரசு ஒமியோபதி மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து வீடு,வீடாக சென்று ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கும் பணியில் நகராட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
நகராட்சியின் 27 வார்டுகளில் உள்ள 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இந்த மாத்திரைகள் அளிக்கப்பட உள்ளன. முன்னதாக குப்பை இல்லாத நகராட்சியாக மாற்றுவது குறித்தும்,பிளாஸ்டிக் பொருட்களை புறக்கணிக்கப்பது தொடர்பாகவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
வேந்தன்







