திருப்பூரில் காவலர்களுக்கு யோகா பயிற்சி!

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்களின் மன உளைச்சலை போக்க யோகா பயிற்சி நடைபெற்றது ஏராளமான காவலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். காவல்துறையின் பணியாற்றக்கூடிய காவலர்கள் ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும்…

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்களின் மன உளைச்சலை போக்க யோகா பயிற்சி நடைபெற்றது ஏராளமான காவலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

காவல்துறையின் பணியாற்றக்கூடிய காவலர்கள் ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர் இந்நிலையில் காவலர்களுக்கு முறையான உடற்பயிற்சி மற்றும் மன வலிமையை அதிகரிக்கும் விதமாக தமிழக சார்பில் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் யோகா பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது.

இதில் திருப்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய அதிவிரைவு படை மற்றும் ஆயுதப்படை காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநவ் உத்தரவின் பேரில் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள அலுவலக வளாகத்தில் “வாழ்க வளமுடன்” அமைப்பு சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் மன வலிமையை ஊக்கப்படுத்தும் விதமாக யோகா பயிற்சிகளு மூச்சு பயிற்சிகளும் அளிக்கப்பட்டது இதில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.