செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லையில் நடத்தப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்!

இறுதியாண்டு மாணவர்கள் உட்பட அனைவருக்கும் மார்ச் 31-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவி வரும் காரணத்தால், மாணவர்களை…

இறுதியாண்டு மாணவர்கள் உட்பட அனைவருக்கும் மார்ச் 31-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவி வரும் காரணத்தால், மாணவர்களை பாதுகாக்க அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் உட்பட அனைவருக்கும் வரும் 31ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 15 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 3-வது வாரத்துக்குள் நடத்தி முடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. 3வது முறையாக செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.