திருச்சியில் மசாஜ் சென்டர் என்கிற பெயரில் பாலியல் தொழிலை நடத்தி வந்த 8 பேர் அதிரடியாக கைது – நான்கு மசாஜ் செண்டர்களில் இருந்து 13 பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் மசாஜ் செண்டர் மற்றும் ஸ்பாக்களில் பாலியல் தொழில் கொடி கட்டி பறப்பதாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் கருமண்டபம்,பொன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆரஞ்ச் ஸ்பா உள்ளிட்ட Spaக்களில் பாலியல் தொழில் நடைபெறுவது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மசாஜ் செண்டர் மற்றும் ஸ்பாக்களில் மீண்டும் இது போன்ற நிலை நடந்து வருவதாக தனிப்படை போலீசார்க்கு தகவல் கிடைத்தது – இதை அடுத்து கண்டோன்மெண்ட், உறையூர் ,கே.கே நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வேதா, ஆர்ச்சர்டு உள்ளிட்டஐந்து சென்டர்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டு அதன் உரிமையாளர்கள் மற்றும் புரோக்கர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 13 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர் – அந்த 13 பேரில் டிக் டாக் சூர்யா எனப்படும் சுப்புலட்சுமி, தான் உண்டு தன் வேலை உண்டு டிக் டாக் என மூழ்கிக் கிடந்த சூர்யா டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு பொழுது போக்கு இன்றி இருந்து வந்த நிலையில் இந்த சென்டருக்கு வேலைக்கு வந்ததாக கூறப்படுகிறது.







