தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி திமுக தனது கூட்டணிகட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. அதன் படி காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மமக, உள்ளிட்ட கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மனித நேய ஜனநாயகக் கட்சி மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இரு கட்சிகளுமே திமுகவின் சின்னத்திலேயே போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







