திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மனைவி காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் மனைவி அனுஷ்யா உடல்நலக்குறைவால் காலமானார். அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் மனைவி அனுஷ்யா உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள…

முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் மனைவி அனுஷ்யா உடல்நலக்குறைவால் காலமானார்.

அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் மனைவி அனுஷ்யா உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 70. அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் இல்லத்தில் மாலை 4 மணி வரை இறுதி அஞ்சலி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெகத்ரட்சகனின் மனைவி அனுஷ்யா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயலாளர் துரைமுருகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதிமாறன் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply