இடது கை வேகப்பந்துவீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார்.
10 ஓவர்களில் 70 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்திய நடராஜன் அதில் ஒரு ஓவரை மெய்டனாகவும் வீசினார்.
இதனிடையே நடராஜனின் அறிமுகம் குறித்து தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக்கிடம் நேயர் ஒருவர் கேட்ட போது, “இந்திய அணியில் நடராஜனின் அறிமுகம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது, 2017-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக நான் அவரை 3 கோடி மதிப்பில் தேர்வு செய்தேன்.
அப்போது உள்ளூர் போட்டிகளில் ஆடாதவர், TNPL தொடரில் மட்டுமே பங்கேற்றவரை இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளீர்களே என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நான் பணத்தை விட திறமையை பெரிதாக பார்த்தேன். யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசும் அவரின் நேர்த்தி அணிக்கு உதவும் என நம்பினேன்.” நடராஜன் குறித்து இவ்வாறு சேவாக் தெரிவித்துள்ளார்.







